Monday, June 11, 2012

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11.2 மில்லியன் ரூபா நட்டஈடு!

Monday, June, 11, 2012
இலங்கை::யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் இதற்கான நிகழ்வு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், சொத்துக்களை இழந்தவர்களுக்கும் சுமார் 11.2 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 91 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 60 பேரும் இதன்போது நட்டஈட்டினை பெற்றுக்கொண்டனர்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

யுத்த காலத்தில் காணாமற் போனவர்களை கண்டுபிடித்து தருமாறும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிபோராளிக்கும் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இவர்கள் சமூக ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள், பொருளாதார வளங்கள் மற்றும் தொழில் ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது அமைச்சர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment