Monday, June 11, 2012

யாழ்பாணத்தில் வீடற்ற 59 குடும்பங்களுக்கு, அரசாங்கத்தால் நிரந்தர வீடுகள்!

Monday, June, 11, 2012
இலங்கை::சமூக சேவைகள் அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், யாழ்பாணத்தில் வீடற்ற 59 குடும்பங்களுக்கு விரைவில் நிரந்த வீடுகளை நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன.

இத்திட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை மதிப்பிற்குரிய சமூக சேவைகள் அமைச்சர் திரு.பீலிக்ஸ் பெரேராவால், உடுவில், மல்வம் திரு.பீ.பதீர்செல்வத்தின் வீட்டிற்கான அடிக்கல் நடப்பட்டதன் மூலம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. திரு.பதீர்செல்வம் எட்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவ் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவிகள் அமைச்சினால் குறிப்பிட்ட பிரதேச செயலகத்தில் ஊடாக வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வை தொடர்ந்து, அமைச்சர் அவர்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அங்கவீனமுற்ற 100 பொதுமக்களுக்கு 50 சக்கரநாற்காலிகளும், 50 ஊண்றுகோல்களும் வழங்கும் வைபவத்தில் கலந்துக்கொண்டார். இவர்கள் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் 51ஆவது படைப்பிரிவினரால் தெரிவுசெய்யபப்பட்டனர்.

இந் நிகழ்வில் 70 வயதிற்கு மேற்பட்ட 200 வயோதிபர்களுக்கு 1000/= ரூபா வைப்பிலிடப்பட்ட கணக்குப்புத்தகம் வழங்கிவைக்கப்பட்டதுடன், இவர்களுக்கு தொடர்ந்துவரும் ஒவ்வொரு மாதமும் இக்கொடுப்பணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு. ஆர்.எம்.எஸ் ரத்தினாயக, யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, யாழ் அரசாங்க அதிபர் திரு.எஸ். அருமைநாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment