Monday, June 11, 2012

புலிகளின் சயனைட் குப்பி ஒன்றை வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

Monday, June, 11, 2012
இலங்கை::புலிகளின் சயனைட் குப்பி ஒன்றை வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொலனறுவை புலஸ்திபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த படைவீரரரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளினால் பயன்படுத்தப்பட்ட சயனைட் குப்பியை வைத்திருந்தாரா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment