Wednesday, May 16, 2012

தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து இந்த வாரத்துள் அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தெரியப்படுத்தப்படும் - TNA!

Wednesday,May, 16, 2012
இலங்கை::நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு இந்த வாரத்திற்குள் அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தெரியப்படுத்துவது என கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில் தாம் பங்கேற்க வேண்டுமாயின் அரசாங்கம் நம்பகமான வேலைத்திட்டத்தை முன்nடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தை ஒன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்;தினம் இரவு கொழும்பில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட விடயங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து அறிய தருவதற்காக, ரணில் விக்ரமசிங்கவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு அமைய, கூட்டமைப்பினர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

பொது நிகழ்ச்சி நிரல் ஒன்றின் கீழ் தெரிவுக்குழுவில் கலந்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் குறித்து ரணில் விக்ரமசிங்க, இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள செய்வதற்காக ரணில், எடுக்கும் முயற்சிகளை சம்பந்தன் பாராட்டியுள்ளார்.

பொது நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் தயாரித்து, பேச்சுவார்;த்தைகளை ஆரம்பிக்குமானால், அதில் நம்பகதன்மை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள சம்பந்தன், தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு கலந்துக்கொள்வது பற்றி, தமது கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment