Wednesday,May, 16, 2012சென்னை::புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டை மாவட்டம் தேமுதிக செயலாளராக உள்ள ஜாகீர் உசேன் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அவர் அறிவித்தார். இந்நிலையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், அதிமுக, தேமுதிக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை இடைத்தேர்தல் வருகிற ஜூன் 12ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment