Wednesday,May, 16, 2012இலங்கை::அமெக்காவினதும் இந்தியாவினதும் அழுத்தங்களுக்கு அஞ்சியே அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேசிவருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவால் ஒரு போதும் தீர்வுகாண முடியாது. அரசின் இழுத்தடிப்பு பொறிக்குள் தமிழர்கள் சிக்கிவிடக் கூடாது என ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேர்மையாக செயற்பட விரும்புவதாயின் அவை முதலில் நாட்டிற்கு அறிவிக்க வேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து தீர்வுத்திட்டத்தை இழுத்தடித்து சர்வதேசத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுவ தாகவே அரசின் வியூகங்கள் அமைந்துள்ளன. எவ்வாறாயினும் ஜே.வி.பி தெரிவுக் ழுவில் பங்கேற்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தனது ஏமாற்று நடிப்புகளை தொடர்ந்தவாறே உள்ளது. அரசியல் தீர்வு விடயத்தில் மனிதாபிமானமற்ற முறையிலேயே தற்போதைய அரசாங்கம் நடந்துக் கொள்கின்றது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களை தொட்ட நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளே நாட்டின் பொதுவான பிரச்சினைகளோ தீர்வுகளை தொடவில்லை. மாறாக நாட்டிற்கு எதிராக பாரிய சர்வதேச அழுத்தங்களே ஏற்பட்டுள்ளன.
நாட்டிற்கு எதிராக மேற்குலக நாடுகள் மிகவும் தீவிரமாகவே செயற்படுகின்றன.குறிப்பாக இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை விவகாரங்களில் கடும்போக்குடனேயே செயற்படுகின்றன. இதன் காரணமாகவே தற்போது மீண்டும் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற விடயத்தை முன்வைத்து அரசியல் தீர்வு குறித்து பேசுவதற்கு ஏனைய எதிர்கட்சிகளை அழைக்கின்றது.
கடந்த பல ஆண்டுகாலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசு முன்னெடுத்த பேச்சுக்கள் இணக்கப்பாடுகள் மற்றும் தீர்வுத்திட்ட யோசனைகள் என்பன வெறும் காலத்தை கடத்திய செயலா கவே அமைந்திருந்தன. இந்த நிலையினை மீண்டும் தொடர இடமளிக்க கூடாது. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க ஜே. வி.பி முழு பங்களிப்புடன் செயற்படும்.
ஆனால், இழுத்தடிப்புகளுக்கு துணை போகாது முதலில் அரசாங்கம் எதிர்பார்க்கும் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும். அதன் பின்னரே ஏனைய தரப்புக்களின் யோசனைகளை பெற்றுக்கொண்டு இறுதி நடவடிக்கைகளுக்கு செல்லவேண்டும். மீண்டும் புதிய பேச்சுவார்த்தைகள் மூலம் ஆரம்பத்தலிருந்தே தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசுவது என்பது வேறு நோக்கங்களை வெளிப்படுத்துகின்றது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment