Wednesday, May 16, 2012

சன் சீ கப்பல் தொடர்பில் இருவருக்கு எதிராக கனேடிய பொலிஸார் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்!

Wednesday,May, 16, 2012
சன் சீ கப்பல் தொடர்பில் இருவருக்கு எதிராக கனேடிய பொலிஸார் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.

சன் சீ கப்பலின் ஊடாக 492 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவை சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான முறையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துசு; சென்றமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்லும் நோக்கில் கப்பல் ஒன்றை கொள்வனவு செய்தாக, சன் சீ கப்பலை கொள்வனவு செய்த குணாரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆட்கட்டத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக கப்பலில் பயணம் செய்த லெஸ்லி ஜனா இமானுவல் என்பவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் கனேடிய காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

இருவரும் வன்கூவார் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையும், ஒரு மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்படக் கூடும் என குறிப்பிடப்படுகிறது.

தயாகரன் மார்கண்டு என்பவருக்கு இதேவிதமான குற்றச்சாட்டுக்கள் அண்மையில் கனேடிய நீதிமன்றில் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment