Wednesday,May, 16, 2012இலங்கை::மட்டக்களப்பின் முன்னைய அரச அதிபராக இருந்த சுந்தரம் அருமைநாயகம் இன்று (16.05.12) காலை யாழ்.மாவட்டத்தின் புதிய அரச அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ்.மாவட்ட நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இவரது பதவியேற்கும் வைபவம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,
யாழில் எழும் சவால்களை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் யாழ்.மாவட்டத்திற்கு அரச அதிபாராக நியமிக்கப்பட்டதை தான் பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட தான் யாழின் புவியியல் சார் தேவைகளை விளங்கிக் கொண்டுள்ளதாகவும் இந்த மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றுவது என்பது மிகவும் வரப்பிரசாதம் என்றே கருதுவதாகவும் தெரிவித்தார்.
சர்வதேசத்தில் மிகவும் முக்கியம் பெற்று விளங்கும் யாழ்ப்பாணம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அந்த சவால்களுக்கு முகம் கொடுக்க தான் தயாரக இருப்பதாக தெரிவித்தார்.
யுhழ் மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதறகாக அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்பார்ப்பதாகவும் கூறினார்.
அனைத்து உத்தியோகத்தர்களும் ஒரு இலக்கை அடைவதற்காக முயற்சிக்க வேண்டும். குறிப்பாக அபிவிருத்தி தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்களை நடத்தி அவற்றை செவ்வனே செய்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, வவுனியாவின் முன்னைய அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் மட்டக்களப்பு அரச அதிபராக இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
No comments:
Post a Comment