Saturday, May 26, 2012

இலங்கையர்களுக்கு வௌ்ளிப் பெயர்ச்சியை காணும் வாய்ப்பு!

Saturday, ,May, ,26, 2012
இலங்கை::சூரியன், வௌ்ளிக்கிரகம் மற்றும் புவி ஆகியன ஒரே நேர் கோட்டில் நிலை கொண்டுள்ளதை காணும் வாய்ப்பு அடுத்த மாதம் 6ஆம் திகதி இலங்கையர்கள் உள்ளிட்ட உலக மக்களுக்கு கிடைக்கவுள்ளது.

வௌ்ளிப் பெயர்ச்சி என அடையாளப்படுத்தப்படும் இந்த கிரக அமைப்பு சுமார் 100 வருடங்களுக்கு பின்னர் ஏற்படுகின்ற அரிய சந்தர்ப்பமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த கிரக அமைப்பை பார்வையிடுவதற்காக பாதுகாப்பான முறைமைகளை கையாளுமாறு பேராசிரியர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வழமையாக இடம்பெறும் சூரியன் மீது வௌ்ளிக் கிரகத்தின் நிகழ்வை சூரியோதயம் முதல் சில மணித்தியாலங்களுக்கு காண முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறியுள்ளார்.

சூரியன் வௌ்ளிக்கிழமை மற்றும் புவி ஆகியன ஒரே நேர் கோட்டில் நிலை கொண்டுள்ளதை 2117 ஆம் ஆண்டிலேயே மீண்டும் காண முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment