Saturday, ,May, ,26, 2012இலங்கை::எம்பிலிப்பிட்டி கொலொன்ன பகுதியிலுள்ள பல்வேறு பாடசாலைகளில் கணணிகளை திருடி விற்ற மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் கணணிகளை சந்தேகநபர்கள் திருடியமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் உள்ள கணணிகள் திருடப்படுகின்றமை தொடர்பாக நியூஸ்பெஸ்ட் ஏற்கனவே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தது.
இந்நிலையில் எம்பிலிப்பிட்டி பிரதேச பாடசாலைகளில் கணணிகளை திருடிய சந்தேகநபர்களை இறக்குவானை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் கடற்படை உறுப்பினர் ஒருவரும் அடங்குகின்றார்.
சந்தேகநபர்களிடமிருந்து 57 கணணிகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுனாமியன்று தப்பியவர் கைது:-
2004ஆம் ஆண்டு சுனாமி பேரலை ஏற்பட்டபோது மாத்தறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
26 வயதான குறித்த சந்தேகநபர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் இன்று மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...
No comments:
Post a Comment