Saturday, May 26, 2012

14 வயது மகனை வெள்ளை வானில் கடத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன தந்தை எஸ்.பிரபாகரன் கேள்வி?.

Saturday, ,May, ,26, 2012
இலங்கை::இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் கலாச்சர உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் மகன் அக்சைஜன் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டு இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக எஸ். பிரபாகரன் தெரிவித்தார்.

கடத்திச் செல்லப்பட்ட அக்சைஜன் கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் யாழ்.நல்லூர் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தனது மகன் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் நான்கு நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ். பிரபாகரன் குறிப்பிட்டார்.

இந்த கடத்தல் எதற்காக நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை. கடத்தல் காரர்களின் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தனது மகனை வெள்ளை வானில் கடத்தியவர்கள் யார்? என்பது தொடர்பாக யாழ்.பொலிஸாருக்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment