Saturday, ,May, ,26, 2012இலங்கை::ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் சுமுகமான முறையில் இடம்பெற்றுவருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் ரொபிச்சனிற்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைத்து கொள்ளும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
No comments:
Post a Comment