Saturday, ,May, ,26, 2012சென்னை::சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. போட்டியை நேரில் பார்ப்பதற்காக இன்று காலை டிக்கெட் எடுக்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோத உள்ளது. இது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் நேற்று காலை 8 மணி முதல் விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை தொடர்ந்து டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தகவல் பரவியது. இதனால் இன்று காலை 8 மணிக்கு நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால் எந்த கவுன்டரிலும் டிக்கெட் விற்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி கேள்விப்பட்ட சேப்பாக்கம் மைதான ஊழியர்கள் விரைந்து வந்து, இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று மாலையுடன் விற்பனையாகி விட்டது. இன்று டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை என்று கூறினர். ஆனாலும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்றனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து, ரசிகர்களிடம் பேசி திருப்பி அனுப்பினர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
No comments:
Post a Comment