Tuesday, May 22, 2012

பிளஸ் டூ : நாமக்கல் மாணவி முதலிடம்!

Tuesday, May, 22, 2012
சென்னை::+2 தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.வி பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.வி பள்ளி மாணவி கார்த்திகா, நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியை சேர்ந்த மாணவன் அசோக்குமார், மற்றும் நாமக்கல் விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவன் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

நாமக்கல் எஸ்.கே.வி பள்ளி மாணவி பிரபாசங்கரி மற்றும் திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி மகேஸ்வரி ஆகியோர் 1187 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். மேலும், வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகளே இந்த ஆண்டும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 89.7% மற்றும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.2% ஆகும். +2 தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 86.7% ஆகும். மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மொத்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.8% அதிகமாகும்.

பாடவாரியாக முதலிடம் பிடித்த மாணவர்கள்:

தமிழில் விழுப்புரம் ஏ.கே.டி பள்ளி மாணவன் முத்துக்குமரன் 198 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆங்கிலப் பாடத்தில் நெல்லை மாணவர் ஸ்டெபிகிரண் பாண்டியன் 196 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.

தாவரவியல் பாடத்தில் குமரி மாவட்டம் குழித்துறை பள்ளி மாணவர் மிதுன் ஆனந்த் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

கணிதத்தில் 2656 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடத்தில் 1444 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

உயிரியல் பாடத்தில் 620 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்தில் 615 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வரலாறு பாடத்தில் சென்னை எம்எஃப்எஸ் பள்ளி மாணவன் தர்மா மற்றும் திலீப் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment