Tuesday, May, 22, 2012இலங்கை::வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் வரையறுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்த வெற்றிக் கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு காலி முகத் திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய விசேட உரையில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க முடியாது என அறிவித்திருந்தார்.
இந்த உரைக்கு பதிலளிக்கும் வகையில் சம்பந்தன் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினர் பிரதேச மக்களின் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் எட்டு சிவிலியனுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற ரீதியில் கடமையில் ஈடுபடு;த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆலய வழிபாட்டு நிகழ்வுகள், பாடசாலை நிகழ்வுகளில் இராணுவத்தினர் பங்கேற்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment