Thursday, May 17, 2012இலங்கை::இணைய தள முடக்கம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்தக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்துச் சுதந்திரமானது அடிப்படை உரிமையல்ல எனவும், கருத்துச் சுதந்திரத்தை வரையறுக்க முடியும் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐந்து இணைய தளங்கள் முடக்கப்பட்டமைக்கு எதிராக சுதந்திர ஊடக அமைப்பு உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.
இலங்கைத் n;தாலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம் இவ்வாறு இணைய தளங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
இணைய தள முடக்கம் தொடர்பான வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின்; தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை இணைய தள முடக்கத்தின் மூலம் மீறப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பு மனுவில் சுட்டிக்காட்டியிருந்தது.
மக்கள் பிழையாக வழிநடத்தப்படுதல், தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான சேறு பூசல்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்த இணைய தளங்களை பதிவு செய்தல் அவசியமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment