Thursday, May 17, 2012

ஜனாதிபதி ஊடகங்களை நேசிக்கும் ஒருவர் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன!

Thursday, May 17, 2012
இலங்கை::சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதி ஊடகங்களை சிரமத்திற்கு உள்ளாக்க மாட்டார் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவிக்கின்றார்.

சரத் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

பதில் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

சரத் பொன்சேகா விடுவிக்கப்படவுள்ளதாக பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன, குறிப்பாக ஜனாதிபதி ஊடகங்களை நேசிக்கும் ஒருவர், ஊடகங்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் ஒருவரல்ல. இல்லாவிடில் ஊடகங்கள் பொய் கூறியதாகிவிடும் அல்லவா?

கேள்வி - ஊடகவியலாளர்
உண்மையல்லவா?

பதில் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

ஊடகங்கள் பொய் கூறினால், அந்த ஊடகங்கள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமல்லவா? அதனால் ஜனாதிபதி ஊடகங்களைப் பாதுகாப்பார். அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானமொன்றை எடுத்தால் அதனை நேர்த்தியாக எடுத்துச் சொல்வது எனது பொறுப்பு. அவ்வாறு கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு முன்னர் என்னால் அது தொடர்பில் எதனையும் கூற முடியாது.

கேள்வி - ஊடகவியலாளர்
ஜனாதிபதி இந்த விடயத்தை அறிவிப்பாரா?

பதில் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன
ஜனாதிபதி எந்தவொரு விடயத்தையும் செய்துவிட்டு அமைச்சரவைக்குக் கூறுவார். கூறுவதற்கு முன்னரும் சிலவேளைகளில் அவற்றை நிறைவு செய்வார்.

கேள்வி - ஊடகவியலாளர்
இன்று கூறுவாரா?

பதில் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன
ஏதாவது ஒன்றை இன்று கூறினால், நான் அதை நாளை உங்களிடம் கூறுகின்றேன்.

கேள்வி - ஊடகவியலாளர்
அதாவது ஊடகங்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் இருப்பதற்கு இதனைச் செய்வாரா?

பதில் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன
இல்லை, எனக்குத் தெரியாது, ஊடகங்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதில்லையென ஜனாதிபதி கூறினார்.

No comments:

Post a Comment