Thursday, May, 17, 2012இலங்கை::பதவிக்காலத்திற்கு முன்னதாக வடமத்திய மாகாண சபையைக் கலைப்பதனை தடுக்கும் வகையில், மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை அடுத்த மாதம் ஆறாம் திகதி வரை தொடர்ந்தும் நீடிப்பதற்கு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் அனில் ரத்னாயக்க, மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வடமத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.
இந்த இடைக்கால தடையுத்தரவை நிரந்தர உத்தரவாக மாற்றுவதா அல்லது அதனை இரத்துச் செய்வதா என்பது குறித்து அடுத்த மாதம் ஆறாம் திகதி அறிவிக்கவுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment