Thursday, May, 24, 2012இலங்கை::கினிகத்தேனை, பொல்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக யானைத் தந்தங்களை வைத்திருந்த இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவின் சிறப்புப் பணியக உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு யானைத் தந்தங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment