Thursday, May 24, 2012

ஐ.நா பாதுகாப்புப் பேரவை தோல்வி கண்டுள்ளது - சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு!

Thursday, May, 24, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் தோல்வி கண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

சிரியா தொடர்பாக வலுவான நடவடிக்கையை மேற்கொள்வதில் உலக நாடுகள் தோல்வி கண்டுள்ளதாகவும் தனது வருடாந்த அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

பேரவையின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா சிரியாவிற்கு ஆயுதங்களை விநியோகிப்பதாகவும், சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தினை தடைகளில் இருந்து சீனா பாதுகாப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் சலீல் செட்ரி கூறியுள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை தடுப்பதற்கு வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் பஷார் அல் அசாத்திற்கு எதிராக ஆர்பாட்டங்களில் இதுவரை ஒன்பதாயிரத்திற்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளது.

No comments:

Post a Comment