Monday, May 21, 2012

பொன்சேகா உயர்நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்!

Monday, May, 21, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நவலோக வைத்தியசாலையில் இருந்து சற்றுநேரத்திற்கு முன்னர் உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சார்பில் அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் இன்று இரண்டு நகர்த்தல் பத்திரங்களை தாக்கல் செய்துள்ள நிலையிலேயே அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த நகர்த்தல் பத்திரங்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைக் கொடி வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை மற்றும் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னர் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரண்டு மேன்முறையீட்டு மனுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இன்று இரண்டு நகர்த்தல் பத்திரங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி கூறினார்...

No comments:

Post a Comment