Monday, May 21, 2012

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி குருமண்வெளி சந்தியில் இரவு இந்திய பிரஜை ஒருவர் கைது!

Monday, May, 21, 2012
இலங்கை::மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி குருமண்வெளி சந்தியில் நேற்று இரவு இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் வந்து ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பிரஜையை கைது செய்த களுவாஞ்சிக்குடி முகாம் விசேட அதிரடிப்படையினர் அவரை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று (21) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளார்...

பணத்துக்காக கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது; கடத்தப்பட்டவர்களும் மீட்பு!

காலி உடுகம பகுதியில் தாய் மற்றும் குழந்தை ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐந்து இலட்சம் ரூபா கப்ப பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருபதாயிரம் ரூபா ஒப்பந்தம் ஒன்றுக்காக இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்டவர்கள் இன்று அதிகாலை அஹங்கம பகுதியில் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒப்பந்தத்தை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்...

பாலியல் குற்றச்சாட்டில் இரு சவூதி அரேபியர்கள் கைது!

பெண்களை விபசார நடவடிக்கைகளுக்கு வழங்கிய மற்றும் 17 வயதான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டுக்களின் பேரில் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலொன்றிலிருந்து இரு சவூதி அரேபியப் பிரஜைகளும் ஒரு இலங்கைப் பிரஜையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்றையதினம் காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்...

No comments:

Post a Comment