







Monday, May, 21, 2012இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 2010 பெப்ரவரி 8 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொன்சேகா, இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இராணுவத்தினருக்கான ஆயுத கொள்வனவில் மோசடி இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டில் அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இத்தீர்ப்புக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கும் உத்தரப்பத்திரத்தில் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி கையெழுத்திட்டார்.
அதையடுத்து நவலோக்க வைத்தியசாலையிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்ட பொன்சேகா, தனது மேன்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதன்பின் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டார்.
அவரை வரவேற்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னால் திரண்டிருந்தனர்...
அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது-சரத் பொன்சேகா!
அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சற்று முன்னர் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா,
"எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன். இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன்.
மக்கள் எனக்கு பாரியதொரு சக்தியினை வழங்கியுள்ளார்கள். அரசியல் பலிவாங்கல்களுக்கு உட்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க எனது மக்கள் என்னோடு தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக நான் இருப்பேன். படையினர் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியினை தொடர்ந்தும் பாதுகாப்பேன். மக்கள் மத்தியில் சந்தோஷமும், சமாதானமும் நிலைத்து நாட்டில் ஜனநாயகமான ஆட்சியை கொண்டுசெல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுவடுவோம்.
நான் மீண்டும் இந்த நாட்டுக்காக என்னை தியாகம் செய்வேன். என் உயிரைக் கொடுத்தேனும் எம் மக்கள் சந்தோஷமாக வாழ வழிசமைப்பேன். உங்கள் அனைவருக்கும் வெற்றி உண்டாகட்டும்.
No comments:
Post a Comment