Monday, May, 21, 2012இலங்கை::கொழும்பு, புத்தளம், மன்னார் பிரதேசங்களில் இயங்கும் முஸ்லிம் பாதாள உலக குழுக்களின் முக்கியஸ்தர்கள் ஒரு வலைமைப்பாக இயங்கி, ஜிகாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்களை முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக அரச புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
விசேட அறிக்கை மூலம் இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ள அரச புலனாய்வு பிரிவினர், போதைப் பொருளை நாட்;டுக்குள் கடத்தி வந்து,தமது வர்த்தகத்தை சுதந்திரமாக செய்யும் நோக்கில் முஸ்லிம் பாதாள உலக குழுவினர் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஜிகாத் என்ற எண்ணக்கருவை முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்புவதற்காக குறித்த பாதாள உலக குழுவின் தலைவர்கள் தாம் உள்ள பிரதேங்களை உத்தியோகபூர்வமற்ற அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் போல் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. வெளியார் எவரும் அந்த பிரதேசத்திற்கு செல்ல வேண்டுமாயின் அனுமதிகளை பெறவேண்டும் எனவும் இல்லாவிட்டால் வெளியார் எவரேனும் பிரதேசத்தில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தால், வீட்டில் உள்ளவர்கள் அது பற்றி சமபந்தப்பட்ட பாதாள உலக தலைவர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
இதனை தவிர தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் நாட்டின் சாதாரண சட்டத்திற்கு அமைய செயற்பட இந்த குழுவினர் அனுமதிப்பதில்லை. பிரதேசத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அது குறித்து காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யாது. பாதாள உலக குழுவினருக்கு அறிவித்து, அதனை தீர்த்து கொள்ள வேண்டும் என இந்த பாதாள உலக குழுவினர் உத்தரவிட்டுள்ளதாகவும் அ சார்பான அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment