Saturday, ,May, ,26, 2012இலங்கை::காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதாக கூறி இருபாலையைச் சேந்த பெண்மணியிடம் ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்று பணமோசடியில் ஈடுபட்ட நபரைக் கைது செய்யுமாறு யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றப்புலனாய்வுப் பரிவினருக்கு குறித்த நபர் பற்றிய விபரங்களை ஒப்படைத்துள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பாணமோசடிகள் பற்றிய முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செலவதாகவும் பணம் கொடுத்து விட்டு ஏமாறியவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனுக்கு அனுப்பிவைப்பதாக கூறி மலேசியாவில் கொண்டு சென்று அடிமைப்படுத்தப்பட்ட 26 வயது இளைஞனை யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு முயற்சியினால் அண்மையில் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
யாழில் வெளிநாட்டு மோகம் காரணமாக பல இலட்சங்களைத் தொலைத்துவிட்டு மனித உரிமை ஆணைக்குழுவின் படிகளில் மக்கள் தவமிருப்பதாகவும் வெளிநாடுகளுக்கு மோசடிப் பேர்வளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment