Saturday, ,May, ,26, 2012கவுகாத்தி::அசாம் மாநிலத்தின் காங்., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக ஒரு நாள் பயணமாக காங்., தலைவர் சோனியா இன்று அசாம் மாநிலம் செல்கிறார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்., உல்பா பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தினர் . இதில் வியாபாரி ஒருவர் பலியானார். இதனையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் 3 முறை காங்கிரஸ் ஆட்சியை இங்கு தக்க வைத்துக்கொண்டது. இம்முறை ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவு நாள் இன்று கொண்டாடப்பபடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன் மேலும் கட்சி வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சோனியா ஆலோசிக்கவுள்ளார்.
இந்நிலையில் இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உல்பாக்கள் இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையில் துனீஸ்கா மாவட்டத்தில் செல்பாரி என்ற பகுதி ரோட்டோரத்தில் குண்டு ஒன்று வெடித்தது. இதில் வியாபாரி ஒருவர் பலியானார். இந்த குண்டு வெடிப்பை உல்பாக்க்ள்தான் நிகழ்த்தியிருப்பர் என்று கவுகாத்தி எஸ்.எஸ்.பி., அபுர்பாஜிபான் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இம்மாநிலத்திற்கு பிரதமர் வந்தபோதும் உல்பாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment