Saturday, ,May, ,26, 2012இலங்கை::மனித உரிமை மீறல்கள் குறித்து பேச அமெரிக்காவிற்கு தார்மீக உரிமை கிடையாது அநாகரிகமான முறையில் இலங்கை விவகாரங்களில் தலையிடுதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய அரசியலை விமர்சிக்கும் அதிகாரம் எந்தவொரு அந்நிய நாட்டிற்கும் கிடையாது. அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கக் கூடாது. போலியான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை முன் வைத்து இலங்கையின் நற்பெயரை சீரழிக்க மேற்குலக சக்திகள் முன்னெடுக்கும் சூழ்ச்சியை தோல்வியடைய செய்ய வேண்டும் எனவுஅவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகளில் மனித உரிமைகள் நிலை குறித்து அமெக்கா விஷேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் இலங்கை தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
குடும்ப ஆட்சி, ஆள்கடத்தல், ஊடக அடக்குமுறையென்று பல்வேறு குற்றச் சாட்டுக்களை அடிப்படையற்ற முறையில் அமெரிக்கா முன்வைத்துள்ளது. இதனை ஜாதிக ஹெலஉறுமய வன்மையாக கண்டிக்கிறது.
அமெரிக்காவின் தலையீடுகளுக்கு எதிராக அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஏற்றவகையில் நாட்டின் சூழலை மாற்றியமைக்க அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு கடந்த பல வருடங்களாகவே செயற்படுகின்றது. குறிப்பாக புலிகளை அப்புறப்படுத்தியதன் பின்னர் இச் சக்திகள் கடுமையாக செயற்பட ஆரம்பித்தன.
இதனை வேடிக்கை பார்ப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு நலனாக அமையாது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேச அமெரிக்காவிற்கு எவ்விதமான தகுதியும் கிடையாது. ஏனெனில் உலகில் மிகவும் மோசமான முறையில் மனித உரிமைகளை மீறுவது அமெக்காவேயாகும். இதனை ஹிலாரி கிளின்டன் புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
No comments:
Post a Comment