Friday, ,May, ,25, 2012இலங்கை::எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நியுசிலாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது நியுசிலாந்தில் பல்வேறு அரசியல் தரப்பினரையும் சந்திக்கவிருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அவர் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில், எதிர்கட்சித் தலைவரின் பொறுப்புகள், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவிடம் கையளிக்கப்பட்டுளளன.
அத்துடன் இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment