Friday, May 25, 2012

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அடிப்படையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் அமையும் - இலங்கை!

Friday, ,May, ,25, 2012
இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அடிப்படையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் அமையும் என இலங்கை அமெரிக்காவிற்கு வாக்குறுதி அளித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த இலங்கை வெளிவிவகார அமைச்சர், முன்வைத்த செயற் திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் 33 பிரதான பரிந்துரைகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் பாராளுமன்ற மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய கொள்கை, இறுதிக் கட்ட யுத்தம், மனித உரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு, மீள் குடியேற்றறம், ஆபிவிருத்தி ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிற்கு விளக்கம் அளித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு பல்வேறு அமைச்சுக்களும் திணைககளங்;களும் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment