Sunday, ,May, 27, 2012இலங்கை::யாழ். கோண்டாவில் கிழக்கு கலாசார வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி, வானில் வந்தவர்களால் கடத்தல்:-
யாழ்ப்பாணம் - கொக்குவில் - நல்லாயன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத குழுவால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் இன்று 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.50 அளவில் இடம்பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்காக தேவாலயம் சென்று கொண்டிருந்த குறித்த பெண் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.
உரும்பிராய் வடக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய செல்வராசா அர்ச்சனா அம்பிகா என்ற பெண்ணே கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment