Tuesday, May 22, 2012

பொன்சேகாவுக்கு பதவி பட்டம் வழங்க கோரிக்கை -

Tuesday, May, 22, 2012
இலங்கை::டீ.என்.தலைவர் சரத் பொன்சேகாவை முழுமையாக விடுதலை செய்வதுடன், அவருக்கு ஓய்வூதியம் மற்றும் இராணுவ பதவியில் பெற்றுக் கொண்ட தரங்களையும் மீண்டும் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்தகருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகாவை விடுவிப்பதால் மாத்திரம் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியாது என, ஜே வி பி தெரிவித்துள்ளது.

ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கு நடுநிலை வகித்தாக பெயர் பெற்றுக் கொள்ள பலரும் தற்போது போராடி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் வாசுதேவநாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment