Tuesday, May, 22, 2012இலங்கை::தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. தமது நீதி விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் இல்லையேல் விடுதலை செய்யுமாறு தெரிவித்து இவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் அமைச்சர்களான சந்திரசிறி கஜதீர, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் நீதியமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொள்ளும் உயர்மட்ட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு சாதகமான தீர்மானமொன்று கிடைக்கும் பட்சத்தில் மாத்திரமே எமது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படும். இல்லையேல் எமக்கு சாதகமான தீர்வு கிட்டும் வரை எமது இந்த போராட்டம் தொடருமெனவும் மகசின் சிறைச்சாலை கைதிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
மகசின் சிறைச்சாலையிலுள்ள 180 கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையின் 80 கைதிகளும் வெளிக்கடை பெண்கள் பிரிவின் 32 கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment