Saturday, May, 19, 2012சென்னை::ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்தவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான பி.ஏ.சங்மா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று ஜெயலலிதா மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக பி.ஏ.சங்மா வருவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் நிலைக்குழுவில் முதல்வர் ஜெ., நியமனம்!
புதுடில்லி::மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின், நிலைக்குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும், உறுப்பினராக தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் நிலைக்குழுவை, பிரதமர் மன்மோகன் சிங் மாற்றி அமைத்துள்ளார். இக்குழுவுக்கு தலைவராக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இருப்பார். இக்குழுவில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி (நிதி), சரத் பவார் (விவசாயம்), எம்.வீரப்ப மொய்லி (கம்பெனிகள் விவகாரம்), மு.க.அழகிரி (உரம் மற்றும் ரசாயனம்), சல்மான் குர்ஷித் (சட்டம்) மற்றும் முகுல் ராய் (ரயில்வே) ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மட்டுமல்லாமல், மாநில முதல்வர்கள் ஜெயலலிதா (தமிழகம்), உம்மன் சாண்டி (கேரளா), நவீன் பட்நாயக் (ஒடிசா), அகிலேஷ் யாதவ் (உத்தர பிரதேசம்), நரேந்திர மோடி (குஜராத்), பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), மாணிக் சர்கார் (திரிபுரா) மற்றும் லால் தான்ஹாவ்லா (மிசோராம்) ஆகிய ஒன்பது மாநில முதல்வர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment