Saturday, May, 19, 2012பிரான்ஸ் நாட்டில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்திய தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் சிறப்பு புலனாய்வு மற்றும் சிறப்புப்படையின் தலைவர் லீமெவுண்டே கூறியதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் தலைவர் மெகமது மேகராக், கட்டளையின் பேரில் பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை சில பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு பயிற்சி பெற்று பிரான்ஸிற்குள் ஊடுருவியுள்ளனர் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து பிரான்சில் இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 15-ம் தேதியன்று அல்ஜீரியா நாட்டைச்சேர்ந்த 23 வயது நிரம்பிய பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் 32 மணி நேர போராட்டத்திற்கு பின் சுட்டுக்கொன்றனர். எனவே அதே போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவே பிரான்ஸ் உளவு நிறுவனமும், பாதுகாப்புப்டையினரும் உஷார்படுத்தப்பட்டனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்ந்து பிரான்ஸ் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது.
No comments:
Post a Comment