Tuesday, May 22, 2012

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை கொழும்பில் நடத்த அனுமதி!

Tuesday, May, 22, 2012
இலங்கை::ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை ஏற்கனவே திட்டமிட்டவாறு கொழும்பில் நடத்த ஆசிய மெய்வல்லுநர் சங்கம் அனுமதி அளித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நிர்வாகிகள் சபையை சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இந்தப் போட்டிகள் பிற்போடப்பட்டதாக ஆசிய மெய்வல்லுநர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மொரிஸ் நிக்கலஸ் நேற்று தெரிவித்திருந்தார்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment