Tuesday, May, 22, 2012இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் சரத் பொன்சேகா நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார்.
அரசியல் கைதியான சரத் பொன்சேகாவை விடுதலை செய்தமை வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சரத் பொன்சேகா பொது மன்னிப்பு அடிப்படையில் வெளியிட்டமையை வரவேற்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment