Tuesday, May, 22, 2012சனா::ஏமன் நாட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 100க்கும் அதிகமானோர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. சர்வதேச நெருக்கடியால் அதிபர் பதவியில் இருந்து விலகிய சலே, அப்த் ரபு மன்சூர் ஹதியை அதிபராக்கிவிட்டு, மருத்துவ சிகிச்சைக்கா அமெரிக்கா சென்று விட்டார். இந்நிலையில், தீவிரவாத தாக்குதல்களும் அங்கு அதிகரித்துள்ளன. தலைநகர் சலேவில் நேற்று ராணுவ வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அப்போது ராணுவ உடையில் வந்த தீவிரவாதி, தன் உடலில் மறைத்து கொண்டு வந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் 100க்கும் அதிகமானோர் பரிதாபமாக இறந்தனர்.
இதற்கு அல் கய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அன்சார் அல் ஷரியா என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அப்யான் பகுதியில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி கொன்று வருகின்றனர். அதற்கு பழி வாங்கவே தாக்குதல் நடத்தப்பட்டது என்று இந்த அமைப்பு கூறியுள்ளனர். ராணுவ வீரர்களின் ஒத்திகை நடந்த போது, ஏமன் ராணுவ அமைச்சர், ராணுவ தளபதி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்த் தப்பினர். அவர்களை கொல்வதற்காக இந்த தாக்குதல் நடக்கவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதுகுறித்து ராணுவ அமைச்சகம் கூறுகையில, வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் அதிகமானோர் இறந்தனர். 222 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வீரர்கள் ஒத்திகை முடியும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தது. இது கொடூரமானது. வீரர்கள் பலர் கை, கால்களை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment