Sunday, May 27, 2012

இஸ்லாமாபாத்தில் நடந்த இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி!

Sunday, ,May, 27, 2012
இஸ்லாமாபாத்::இந்திய பாகிஸ்தான் உள்துறை செயலர்கள் பேச்சுவார்த்தை, இஸ்லாமாபாத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் இரு நாட்டுக்கு இடையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விசா கட்டுப்பாடுகளை தளர்த்துதல் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளில் தீர்வு காண்பது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங்கும் பாகிஸ்தான் உள்துறை செயலர் குவாஜா சித்திக் அக்பரும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுலா விசா, மூத்த குடிமக்களுக்கான விசா, வர்த்தகர்களுக்கு ஆண்டுதோறும் செல்லத்தக்க மல்டிபிள் விசா ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, புதிய விசா நடைமுறைகள் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாகவும் ஒப்புதல் பெற வேண்டி உள்ளதால் இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. எனினும் விரைவில் இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடந்த 2007ம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிப்பு, 2008 நவம்பரில் மும்பையில் நடந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான வழக்குகளில் இருநாட்டு ஒத்துழைப்பு மேம்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், இதுதொடர்பாக இந்திய நீதி கமிஷன், பாகிஸ்தானில் விசாரணை மேற்கொள்ள கொள்கை ரீதியாக முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், ÔÔகடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வந்த போது, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையில் புதிய விசா ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. அதற்கு தயாராக இந்திய உள்துறை செயலர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதில் பாகிஸ்தான் தரப்பினர்தான் தாமதம் செய்கின்றனர்ÕÕ என்றார்.

No comments:

Post a Comment