Sunday, ,May, 27, 2012இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் தொழில்நுட்பசார் ஆலோசனைகளை வழங்குவதற்காக பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்க மனித உரிமைப் பேரவை திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதிநிதிகள் குழு தொடர்பில் இந்த மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் ஊடாக தகவல் அனுப்பி வைத்துள்ளார்.
ஜூலை மாதமளவில் இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் விஜயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு சக்திகளின் தீர்வுத் திட்டத்திற்கு இடமில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment