Thursday, May 17, 2012

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்(திமுக) வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

Thursday, May 17, 2012
சேலம்::முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்(திமுக) வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேலம், தருமபுரி உட்பட மொத்தம் 16 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக வீரபாண்டி ஆறுமுகம் சொத்து சேர்த்தாக கூறி இந்த சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்...

தி.மு.க., ஆட்சிகாலத்தில் வேளாண்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் செல்வாக்கு கொண்ட வீரபாண்டி ஆறுமுகம் பூலாவரி பகுதியை சேர்ந்தவர். இவர் எம்.ஜி.ஆர்.,ஆட்சி காலத்தில் சொத்து ரீதியான பிரச்னையில் பூலாவரி சுகுமாறன் என்பவர் சுட்டுவு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வீரபாண்டியின் பெயரும் அடிபட்டது. இதற்கு பின்னர் ஆட்சி மாறியதும் தி.மு.க.,வில் தனிச்செல்வாக்குடன் வளர்ந்து வந்தார்.

தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை பெற்று அமைச்சர் வரை அந்தஸ்து பெற்றார். கடந்த தி,மு.க.,ஆட்சியில் வேளாண்துறை அமைச்சராக இருந்த இவர் மீது நிலஅபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் படையினர் சேலம் பூலாவரி வீட்டிற்கு வந்தனர். வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது ‌தொடர்பாக போலீசார் ரெய்டு நடத்தி ஆவணஙகளை கைப்பற்றி வருகின்றனர்.

எங்கு காணினும் சோதனையடா: வீரபாண்டியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் என 16 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. ரெய்டு நடந்து வரும் பகுதிகள் வருமாறு: சேலம் பூலாவரியில் உள்ள அவரது வீடு, மருமகள் பிருந்தா செழியன் வீடு, உறவினர் பாறைப்பட்டி சுரேஷ்குமார் வீடு, உதவியாளர் சேகர் வீடு, தர்மபுரியில் உள்ள அவரது மகள் நிர்மலா வீடு, சென்னையில் உள்ள வீரபாண்டியின் வீடு, மற்றும் அவர் நடத்தி வரும் கல்லூரி, பள்ளிகள், அலுவலகங்கள் என 16 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment