Friday, ,May, ,25, ,2012இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேக்காவுடன் இணைந்து சேவையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சரத் பொன்சேக்கா தற்போது மேற்கொண்டு வரும் சமய அனுஷ்டானங்களை நிறைவு செய்த பின்னர், அரசியல் வேலைத்திட்டங்களை செயற்படுத்துவார் எனவும் பொன்சேக்கா தற்போது, பௌத்த மடாதிபதிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருவதாகவும் அனோமா பொன்சேக்கா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment