Friday, May 25, 2012

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி வழக்கு தாக்கல்!

Friday, ,May, ,25, ,2012
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் வழங்கப்பட்ட இலங்கை அகதி ஒருவர் தாம் காலவரையின்றி அங்கு தடுத்து வைத்திருப்பதை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை செயலாளர் அந்த துறைக்கான அமைச்சர், அவுஸ்திரேலிய கமன்வெல்த் அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கை அகதியின் சார்பில் அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் நல அமைப்பொன்று தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள அமைப்பின் அதிகாரி ஒருவர் பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியில், குறித்த அகதி அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்பட்டாலும் அது குறித்து சுயாதீனமான விசாரணை நடத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தவறான பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒருவர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய சட்டங்களின்படி ஒரு அகதியை காலவரையின்றி தடுத்து வைப்பது குற்றமாகும் என்றும் மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது தரப்புக்காரர் அதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அகதிகள் நல அமைப்பின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment