Friday, ,May, ,25, ,2012சென்னை::புதிய கேலரிக்கு ஐகோர்ட் நேற்று அனுமதி அளித்ததை தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடக்கும் போட்டிக்கும், நாளை மறுநாள் நடக்கவுள்ள இறுதி போட்டிக்கும் டிக்கெட் எடுக்க ரசிகர்கள் குவிந்தனர். ஐபிஎல் 5வது சீசன் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் சில போட்டிகள் நடந்தன. இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் மேற்கு பகுதியில் 3 கேலரிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி சிஎம்டிஏ அனுமதி அளிக்காமல் இருந்தது. இதனால் சென்னையில் நடந்த 8 போட்டிகளின்போதும், தடை செய்யப்பட்ட 3 கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. மற்ற 3 கேலரிகளில் உள்ள 12 ஆயிரம் இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட் விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதும் முக்கிய போட்டி இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் இதே மைதானத்தில் கொல்கத்தா நைட் டைரர்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியை காண ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.மைதானத்தில் சீல் வைக்கப்பட்ட கேலரிகளில் 12 ஆயிரம் இருக்கைகள் காலியாக இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.
இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் தடை செய்யப்பட்டுள்ள இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இன்று முதல் ஒரு வாரத்துக்கு புதிய கேலரியை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்தலாம் என அனுமதி அளித்தது. எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கிரிக்கெட் வாரியம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட 3 கேலரிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், இன்று அதிகாலை 5 மணிக்கே சேப்பாக்கத்துக்கு திரண்டு வந்தனர். டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு டிக்கெட் விற்பனை துவங்கியது. இன்றைய போட்டிக்கான ரூ.700, ரூ.500க்கான டிக்கெட்டுகள் மதியத்துக்குள் விற்றுத் தீர்ந்தன. அதைத் தொடர்ந்து நாளை நாளை நடக்கும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
No comments:
Post a Comment