Friday, May 25, 2012

இந்திய உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்புக்கு விஜயம்:-இலங்கைக்கான இந்தியத்தூதுவர்-கூட்டமைப்பு இன்று சந்திப்பு!

Friday, ,May, ,25, ,2012
இலங்கை::இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோக்கே காந்தா இன்று (25.5.2012) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். இந்திய உயர்ஸ்த்தானிகரின் இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு நகரில் புனரமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலையை பார்வையிட்டு மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்களை தூவி வணக்கம் செலுத்தினார்.

காந்திசேவா சங்கம், மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடு செய்த இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் கே.சிவசாதன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், காந்திசேவா சங்கத்தின் தலைவர் செல்வேந்திரன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் இந்த மகாத்மா காந்தியின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல் வேறு வைபவங்களிலும் இன்று கலந்து கொண்டார்...

இலங்கைக்கான இந்தியத்தூதுவர்-கூட்டமைப்பு இன்று சந்திப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அசோக் கே.காந்தாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்றது.

கல்லடி நடைபெற்ற இச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொன் செல்வராசா, சரவணபவான், பா.அரியநேத்திரன், சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment