Thursday, May 17, 2012இலங்கை::காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த சில தினங்களாக இடம் பெற்றுவந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை காத்தான்குடி பொலிசார் (16.5.2012) சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்துவரும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எஸ்.அமரசிறி தலைமையிலான பொலீஸ் புலனாய்வு அதிகாரி எம்.தாஹா, மற்றும் கிருபா ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழவினர் இவ்விருவரையும் கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகை மற்றும் சில பொருட்களும் கைப்பற்;றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்ப்பட்ட இவ்விரண்டு சந்தேக நபர்களும் ஆரையம்பதி பிரதேசத்தின் தாழங்குடாவைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் இடம் பெற்றவரும் கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் காத்தான்குடியைச்சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment