Thursday, May 17, 2012

அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை மீது தீர்வுத் திட்டமொன்றை திணிக்கக் கூடும்: ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளது!

Thursday, May 17, 2012
இலங்கை::அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை மீது தீர்வுத் திட்டமொன்றை திணிக்கக் கூடும் என ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் அமெரிக்க விஜயமானது அதிகாரப் பகிர்வினை வலுப்படுத்தும் வகையில் அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சர் பீரிஸ் மற்றும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் ஆகியோரின் சந்திப்பு இலங்கை தொடர்பில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வழிகோலும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.

காலணித்துவ நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அடிபணிந்து செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இதனை வன்மையாக எதிர்ப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் காலணித்துவ நாடுகளின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தே செயற்படுகின்றது என ஜே.வி.பி மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment