Thursday, May 24, 2012

பொருளாதார அபிவிருத்தியே தேசிய நல்லிணக்கத்துக்கு வழிகோலும் - பிரதி அமைச்சர் - பைசர் முஸ்தபா!

Thursday, May, 24, 2012
இலங்கை::கேள்வி: போருக்குப் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றிக் கூறுவீர்களா!

பதில்: கடந்த 30 ஆண்டு காலமாக இந்நாட்டைப் பீடித்திருந்த தீவிரவாதத் தீ வடக்கை சிதைத்தது. அரசியல்வாதிகளை அழித்தது. சிந்தனையாளர்களை கருவறுத்தது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து தென்னிலங்கையை அழித்தது. முழு நாட்டையுமே பீதியில் ஆழ்த்தியது. இந்தப் பயங்கரவாதத்தை அழிக்க நம் நாட்டிலே மாறி மாறி வந்த அரசுகள் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. ஸ்ரீல. சு. க. இந்தப் பயங்கரவாதத்துக்குக் காரணமான இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இதய சுத்தியுடன் முன்னெடுத்த முயற்சிகளை எதிரணியிலிருந்து ஐ. தே. க. முறியடித்தது. தீர்வைப் பாராளுமன்றத்தில் கிழித்தெறிந்து எரித்தது.

பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் எதற்கும் புலிகள் கட்டுப்படவில்லை. தீய சக்தியின் வளர்ச்சி பூதாகரமாகி உலகில் சில நாடுகளின் ஆதரவையும் பெற்றிருந்தது. இந்தத் தீய சக்தி முறியடிக்க முடியாத இமாலய சக்தி என உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கருதப்பட்டது. யுத்தத்திலே மனித வளங்கள் அழிந்தன. இயற்கை வளங்கள் சிதைந்தன. என்ன விலை கொடுத்தாயினும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென திடசங்கற்பம் பூண்டவர் நமது ஜனாதிபதி தான்.

அவரது வீரத்தால், துணிச்சலால், யுத்த வியூகத்தால் பயங்கரவாத சக்தியை முறியடித்தார். இதைச் சற்றுமே எதிர்பாராத சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் வியப்பும் வேதனையும் அடைந்தன. இன்று பயங்கரவாதம் ஒழிந்துவிட்டது. நாட்டு மக்கள் அமைதி பெற்று சிறப்பாக வாழ நாட்டின் பொருள் வளம் அதிகரிக்கப்பட வேண்டும். நாட்டின் நற்பிரஜைகள் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தெரிந்த தொழிலில் ஈடுபட வேண்டும். மனித வளம் பூரணமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம் தான் பொருளாதார வளத்தைப் பெற முடியும். எனவே தான் நாட்டு மக்களின் எதிர்கால சுபீட்சம் கருதி பாரிய அளவில் அபிவிருத்தித் திட்டங்கள் மஹிந்த சிந்தனைக் கோட்பாடுகளுக்கமைய முன்னெடுக்கப்படுகின்றன. விவசாயம், மீன்பிடிக் கைத்தொழில் துறையிலே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தி காண அரசு திடசங்கற்பம் பூண்டுள்ளது.

நாட்டிலே அபிவிருத்தியை மேற்கொண்டு அதன் பலனாக ஏற்றுமதியைப் பெருக்கவும் இறக்குமதியைச் சுருக்கவும் அரசு வியூகம் வகுத்துச் செயற்படுகின்றது. சர்வதேச சமூகத்துடன் சமத்துவமாக வாழ கல்வி, விஞ்ஞானம், தொழில் நுட்பத்துறைகளில் முன்னேற்றம் காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் மூலம் தான் மக்களை மேம்படுத்த முடியும் என்பது ஜனாதிபதியினதும் அரசினதும் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் உள்ளன. இந்த அபிவிருத்தி திட்டங்கள் தெற்கில் மட்டுமல்ல வடக்கு – கிழக்கிலும் பாரிய திட்டங்களாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

போரினால் அழிவுற்ற இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும், அங்குள்ள உட் கட்டமைப்பு வேலைகளைத் துரிதமாகச் செய்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விடவும் அரசு முன்னுரிமை அளித்து செயற்படுகிறது. இனம், மதம், வடக்கு, கிழக்கு என்ற பேதமின்றி இந்தச் செயற்பாடு நடைபெறுகின்றது.

கேள்வி: சர்வதேச நாடுகள் சில இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனவே. அது பற்றி என்ன நினைக்கிaர்கள்?

பதில்: இந்த நாட்டிலே தீர்க்கப்படாத இழுபறியில் இருந்து வந்த இனப் பிரச்சினை பயங்கரவாதமாக உருவெடுத்து, நாட்டு மக்களுக்கு உயிர்ப் பலி யையும் பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. அரசை அடிபணிய வைக்கலாம். அதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றலாம் என்ற கனவு ஜனாதிபதியின் ஆட்சியிலே நனவாகவில்லை. எதிர்பாராத ஏமாற்றம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்களின் எதிர்பார்ப்பை முறியடித்தது. அந்த ஏக்கம், தாக்கத்தின் விளைவு தான் இலங்கைக்கு எதிரான மனப் போக்கில் நடந்து கொள்கின்றனர். அவற்றை நாம் சவாலாக கருதி முறியடிப்போம்.

இந்த நாட்டிலே பெரும்பான்மை இன மக்கள் போன்று சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழ உரிமை பெற்றவர்கள். இன ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிகள் மேற்கொள்கின்றார். அரசாங்கம் பொருளாதார ரீதியாக வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி எல்லாப் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து வருகின்றது. இலங்கையிலே இனப் பாகுபாடின்றி நடைபெறும் அபிவிருத்திப் பணிகளை நேரில் காண்பவர்கள் இந்த நாட்டிலே இனப் பாகுபாடில்லை எனப் புரிந்து கொள்வர்.

கேள்வி: இனப்பிரச்சினைத் தீர்விலே மூன்றாந் தரப்பின் தலையீடு அவசியம் எனக் கூறப்படுகின்றதே.

பதில்: பெரும்பான்மை, சிறுபான்மை மக்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டிலே பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். எனவே அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். இந்தப் பிரச்சினையில் மூன்றாந்தரப்பின் தலையீடு மேலும் சிக்கலான நிலையை உருவாக்கும். கடந்த காலத்தில் இலங்கையில் நாம் கண்ட அனுபவங்களும் கூட. வெளிநாட்டுத் தலையீடுகளால் பல்வேறு நாடுகளின் இறைமை, பொருளாதார வளம், மக்கள் ஒற்றுமை நாசமாகி வருவதை நாம் கண்கூடாக் காண்கின்றோம். மிக அண்மைய உதாரணங்களாக ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளை நாம் கோடிட்டுக் காட்டலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் உள்நாட்டில் இணக்கப்பாட்டுடன் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். சர்வதேசமோ அல்லது மேற்குலக வல்லரசுகளோ எமக்கு சட்டாம்பியார் வேலை பார்க்கத் தேவையில்லையென்பதே என் கருத்து.

கேள்வி: ஜெனீவா தீர்மானத்தை எவ்வாறான கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்கிaர்கள்?

பதில்: நாம் 30 வருட காலமாக யுத்தத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எனினும் மனித உரிமைகளை மதித்தவர்கள். யுத்தத்தின் பின்னர் நாம் தேசிய நல்லிணக்கத்துடன் வாழத் தலைப்பட்டுள்ளோம். இதனைச் சீர்குலைப்பதற்கும், சிதைப்பதற்கும் ஜெனீவா தீர்மானம் வழிகோலியுள்ளது. இன ரீதியிலான முரண்பாட்டுக்கு மீண்டும் வழி வகுக்கவே இது பயன்படும்.

ஜெனீவா பிரேரணை, அது தொடர்பாக இடம் பெற்ற வாக்கெடுப்பை நாம் உன்னிப்பாக நோக்குவோமேயானால், குறிப்பிட்ட சக்திகளின் அல்லது பிரிவினரின் விருப்பத்திற்கமைவாகவே இது கொண்டு வரப்பட்டுள்ளது. ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலுள்ள பெரும்பாலான நாடுகள் எமக்காக வாக்களித்தன.

இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் பற்றி சிந்திக்கவில்லை.

அமெரிக்கா உட்பட முக்கிய நாடுகள் முனைப்புடன் கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானத்துக்கு எதிராக தாம் வாக்களித்தால் எதிர்காலத்தில் தமது நாடு பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணமே அவர்களிடம் இருந்தது. எனவே தான் இந்தப் பிரேரணை எமக்குப் பாதமாக அமைந்தது.

இஸ்ரேல், பலஸ்தீனம் தொடர்பாக ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை விடயங்களை நோக்கும் போது வல்லரசுகளின் இரட்டை வேடம், பார பட்சமான நடவடிக்கை நன்கு புலப்படும்.

ஜெனீவா தூதுக்குழுவில் நானும் பங்கேற்றிருந்தேன். ஜெனீவா மற்றும் பிராந்தியங்களில் இடம் பெற்ற புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்கள், வெளிநாடுகளில் அகதிகளாகக் குடியேறியுள்ள இலங்கையர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. அதுவும் அங்கு வாழும் இலங்கையர்களின் இரண்டாவது பரம்பரையாலேயே இது பெரிதும் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை எனும் பெயரை மட்டுமே இவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். இலங்கையைப் பற்றி எதுவுமே இவர்களுக்கு தெரியாது. இலங்கையைப் பற்றி தவறான, மிக மோசமான விடயங்கள் பரப்பப்பட்டன. வாக்குரிமை பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகளுக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமே அவர்களால் தமது காரியத்தை சாதிக்க முடிந்தது.

கேள்வி: இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒரு சிறந்த வழிமுறை என நீங்கள் கருதுகின்aர்களா?

பதில்: பாராளுமன்றம் இறைமையின் உறைவிடம். அதனைப் பயன்படுத்தும் இடம். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் சபை, எனவே நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம் பாராளுமன்றமே என்பது என் கருத்து. பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று ஐக்கிய இலங்கைக்குள் பொருத்தமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த எண்ணக்கருவை செயலுருப்படுத்த விரும்புகின்றார்.

கேள்வி: யாழ்ப்பாணத்தில் ஐ. தே.க. - தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மேதினக் கொண்டாட்டங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: இந்த மேதின நிகழ்வில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன். எம். பி. தேசியக் கொடி ஏற்றியமை சிறப்பான விடயம். ஐ. தே. க. வும் த. தே. கூட்டமைப்பும் அவர்களுக்கு இந்த மேதினக் கொண்டாட்டங்களால் நன்மை கிடைக்கும் எனக் கருதியிருக்கலாம். இது அவர்களின் அரசியல் ரீதியான தீர்மானம். எனவே இது தொடர்பாக நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

இந்த விவகாரங்களை நான் நல்ல கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறேன். பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு ஐ. தே.க. கூட்டமைப்புக்கு கூறுவதற்கு அல்லது அதனைப் பங்கேற்கச் செய்ய வைப்பதற்கு இது நல்ல ஒரு சந்தர்ப்பம். தமது அரசியல் உபாயங்களை, இலக்குகளை வெல்வதற்கு தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செல்வது நல்ல வழி என ஐ. தே. க. கருதியிருக்கக் கூடும். அதேபோன்று அரசுக்கும் தமிழ்க் கட்சிகளின் உறவுண்டு. டக்ளஸ் தேவானந்தா, வி. முரளிதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் போன்றவர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றுபவர்களே.

கேள்வி: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நீங்கள் கூறுவதென்ன?

பதில்: அரசு இது தொடர்பாக ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. யுத்தத்தின் போது அந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறிய மக்களை மீள் குடியேற்ற வேண்டுமென சர்வதேசமும் புலம் பெயர் சமூகமும் புலி ஆதரவாளர்களும் கோரிக்கைகள் எழுப்பி வருகின்றமை நாமறிந்ததே. இதனை பெரும் பிரசாரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எதுவுமே அறியாத ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது இந்த அமைப்புகள் பேசாதிருந்தன. தற்போது கூட இந்த அமைப்புகள் முஸ்லிம்கள் தொடர்பாக எந்தக் கரிசனையும் காட்டுவதில்லை. தமிழ்க் கூட்டமைப்பும் இது தொடர்பாக இன்று வரை மெளனம் சாதிக்கின்றது.

ஆனால் நாம் இணக்கப்பாட்டுடனேயே செயற்படுகின்றோம். தேசிய ஒருமைப்பாட்டுக்காக பாடுபடுகின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் புலம் பெயர் சமூகத்துக்கு ஒன்று ஞாபகப்படுத்த விரும்புகின் றோம். வடக்கு, கிழக்கில் இன்று தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். இன உறவு மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. இதனை மனதில் இருத்தி செயற்படுங்கள். உங்கள் இருப்புக்காக, சொகுசுக்காக தமிழ்ச் சமூ கத்தை பலிக்கடாவாக்க வேண்டாம்.

No comments:

Post a Comment