Thursday, May, 24, 2012இலங்கை::கடந்த மாதத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 224 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சேனக்க வலகம்பாய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே இருந்த அதிகாரங்கள் தற்போது கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் சேவையின் நியமனங்கள், இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை ஆகியவற்றிற்கான அதிகாரம் தற்போது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது மக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை பதிவு செய்து விசாரணை செய்யும் பொறுப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக சட்டத்தரணி சேனக வலகம்பாய தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு செயற்படாதிருந்த காலப்பகுதிக்குரிய முறைப்பாடுகள் அனைத்தும் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் குறித்து எவரேனும் திருப்தி அடையாதிருந்தால், புதிதாக முறைப்பாடு செய்வதில் எவ்வித தடையும் இல்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment