Thursday, May, 24, 2012இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலை மைத்துவம் தொடர்பில் 91 வீத மான இலங்கையர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். கோல்அப் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்விலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையர்களில் 10 இல் 9 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தை அங்கீகரித்திருப்பதுடன், அவரின் சேவைகளால் திருப்தியடைந்திருப் பதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள் ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை, சமாதானத்தின் பலாபலன்கள் போன்ற காரணங்களால் லாவோஸ், கம்போடியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்களின் தலைமைத்துவம் குறித்து மக்கள் திருப்தியடைந்திருப்பதாக கோல்அப் நிறுவனம் தனது இணையத்தளத் தில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் கோல்அப் நிறுவனம் 140ற்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு விடயங்கள் தொடர் பில் ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்புக்களை நடத்திவரும் நிறுவனமாகும்.
No comments:
Post a Comment