Wednesday, May 23, 2012

அதிமுகவினருக்கு ரூ.65 லட்சம் நிதி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்!

Wednesday,May, 23, 2012
சென்னை::நலிவடைந்த அதிமுக தொண்டர்கள் குடும்பங்களுக்கு ரூ.65 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார். முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை நிர்வாகிகள் பி.எச்.பாண்டியன், துரை.கோவிந்தராஜன், மைத்ரேயன், ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் அமைச்சர் சம்பத், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அதிமுகவினருக்கு நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 106 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கினார். பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 தொண்டர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாயை ஜெயலலிதா வழங்கினார். மொத்தம் ரூ.65 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கினார். மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 772 உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.

No comments:

Post a Comment